நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .
நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில் ஒரே நாளில் நீர் மட்டம் ஆனது 8 அடி உயர்ந்து 20.40 அடியாக அதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக அணையில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது .

இதன்படி தற்போது அணையின் நீர்வரத்து 1153 கன அடியாக உள்ளது. மேலும் அதே நெல்லை மாவட்டத்தில் இருக்கக்கூடிய தென்காசி பகுதியில் சாரல் விழுந்து வருவதால் குற்றால சீசன் தொடங்கியுள்ளது சீசன் பழக்கம் என்பதால் ஐந்தருவியில் மட்டும் குளிக்கும் அளவிற்கு தண்ணீர் விழுந்து வருகிறது இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்