தென் ஆப்பிரிக்காவை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து…!!

இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்க அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது 

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா –  இங்கிலாந்து அணிகள் மோதியது. இப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டுப்லெஸிஸ் டாஸ் வென்று பந்து வீச  முடிவு செய்தார் . இதையடுத்து இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோவும், ஜேசன் ராயும் ஆட்டத்தை துவங்கினர். போட்டியின் முதல் ஓவரில் இம்ரான் தாஹிர் வீசிய  2 வது பந்தில் பேர்ஸ்டோ 0 ரன்னில் ஏமாற்றமளித்தாலும், அதன் பிறகு வந்த ஜோ ரூட்  59 பந்துகளில்  51  ரன்களும், ஜேசன் ராய் 53 பந்துகளில் 54  ரன்களும் எடுத்தனர்.

அதன் பிறகு வந்த  மோர்கன்  60 பந்துகளில் 57 ரன்களும்,  பென் ஸ்டோக்ஸ் 79 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழந்து 311 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக நெகிடி 3 விக்கெட்டுகளும், இம்ரான் தாஹிர், ரபாடா ஆகியோர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

Image

பின்னர் 312 ரன்கள் இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணியில் துவக்க வீரர்களாக ஹசிம் அம்லாவும், குயிண்டன் டிகாக்கும் களமிறங்கினர். களமிறங்கிய சிறிது நேரத்தில் அம்லா ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பவுன்சரில்  காயமடைந்து பெவிலியன் திரும்பினார். இதையடுத்து  ஏய்டன்  மார்க்ராம் 11 ரன்களில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்து வீச்சில்  ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த கேப்டன் டுப்லெஸிஸும் 5 ரன்னில்  ஆர்ச்சர் வீசிய அடுத்த ஓவரில் வெளியேறினார்.

Image

இதையடுத்து டிகாக்கும், வான் டெர் டசனும் சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிய டிகாக் அரைசதம் கடந்து விளையாடிய நிலையில் ப்லெங்கெட் ஓவரில்  68 (74) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டுமினி 11, பிரிட்டோரியஸ் 1  ரன்களிளும் அவுட் ஆகினர். இருப்பினும்  பொறுப்புடன் விளையாடிய வான் டெர் டசன் 50 (56) ரன்கள் எடுத்த நிலையில் ஆர்ச்சர் வேகத்தில் வெளியேறினார்.

Image

இதையடுத்து வந்த பெலுக்வயோ 24, அம்லா 13, ரபாடா 11, இம்ரான் தாஹிர் 0 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் தென் ஆப்பிரிக்க அணி 39.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.  இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோப்ரா ஆர்ச்சர் 3, ப்லெங்கெட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பென் ஸ்டோக்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். நாளை நடைபெறும் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *