சடலமாக விழுந்த யானை…. இதயத்தை அழுத்தி காப்பாற்றிய…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

விபத்தில் சடலமாக விழுந்த யானை குட்டியை நொடிப்பொழுதில் காப்பாற்றியுள்ள சம்பவம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தாய்லாந்து நாட்டில் சாந்தபூரி என்னும் பகுதியில் யானைக்குட்டி ஒன்று ரோட்டை கடக்க முயன்றுள்ளது. அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று யானைக்குட்டி மீது மோதியுள்ளது. இதனால் பலத்த காயமடைந்த யானைக்குட்டி மயங்கி உயிரில்லாத சடலம் போல சாலையில் கிடந்துள்ளது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உடனே விரைந்து வந்த வனத்துறை மருத்துவர்கள் யானைக்கு இதயம் இருக்கும் பகுதியை நோக்கி இரண்டு கைகளாலும் அழுத்தி உள்ளனர்.

சுமார் 10 நிமிடங்கள் இவ்வாறு இதயத்தை அழுத்தி முதலுதவி சிகிச்சை கொடுத்துள்ளனர். இதையடுத்து யானைக்கு இதயத் துடிப்பு சீராக ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் யானைக்குட்டியை வனத்துறையினர் காட்டுப் பகுதிக்கு சென்று பத்திரமாக விட்டுள்ளனர். இது குறித்த இந்த சம்பவம் இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.