தங்கத் தமிழ்ச்செல்வன் விடுதி அறையில் தேர்தல் பறக்கும்படையினர் அதிரடி சோதனை!!

மதுரையில் தங்கத் தமிழ்ச்செல்வன் தங்கியிருந்த விடுதி அறையில் தேர்தல் பறக்கும்படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.  

வருகின்ற 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில்  அ.ம.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்கத்தமிழ்ச்செல்வன், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதற்காக அவர் கடந்த சில நாட்களாக  ஜெய்ஹிந்த்புரம்  ஸ்ரீதேவி  ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருக்கிறார்.அவரது அறையில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் மற்றும் பரிசு பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்த்து.

இதனையடுத்து தேர்தல் அதிகாரி குழு அங்கு சென்று  தங்கத்தமிழ்ச்செல்வன் வெளியூர் சென்றிருக்கும் நிலையில், அவரது அறை மட்டுமில்லாமல்  எல்லா அறைகளிலும் சோதனை நடத்தினர். மேலும் விடுதிக்கு வெளியே நிறுத்திவைக்கப்பட்டிருந்த அவரது காரிலும் சோதனை நடத்தினர். சோதனையில் பணமோ அல்லது பரிசுப் பொருட்களோ எதுவும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது.