இன்று தேனியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகின்றார் எடப்பாடி….!!

பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து தமிழக முதல்வர் சேலத்தில் இன்று தனது பிரசாரத்தை தொடங்குகின்றார்.

மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி  தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுமென இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட தேர்தலாக ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற  மற்றம் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டது.

Image result for அதிமுக கூட்டணி

 தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இடம்பெற்றுள்ளன . அதே போல அதிமுக தலைமையிலான கூட்டணியில் பிஜேபி , பாமக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றது . இந்நிலையில் இரு கூட்டணி கட்சிகளும் தங்களுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளரை அறிவித்துள்ளனர் . மேலும் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கலும் நேற்று தொடங்கியது .

Image result for எடப்பாடி பிரசாரம்

இந்நிலையில்  அதிமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்குகின்றார் . சேலத்தில் தொடங்கும் இந்த  பிரச்சாரத்தையடுத்து  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 40 மக்களவைத் தொகுதிகளிலும் , 18 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆதரவு திரட்டும் வகையில் அவரது பிரச்சார பயணம் அமைக்கப்பட்டுள்ளது . திமுக தலைவர் மு.க ஸ்டாலினும் இன்று தனது பிரசாரத்தை தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.