குழந்தைகள் விரும்பும் முட்டை பணியாரம் ..!!

சுவையான முட்டைப் பணியாரம் செய்யலாம் வாங்க .

தேவையான பொருட்கள்:

இட்லி மாவு – ஒரு கப்

முட்டை – 2

சின்ன வெங்காயம் – 25 கிராம்

பச்சை மிளகாய் – 2

கடுகு – 1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை – 1 கொத்து

உளுத்தம்பருப்பு – 1/2 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 2 தேவையானஅளவு

முட்டை க்கான பட முடிவு

செய்முறை :

முட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு அடித்து அதனுடன் நறுக்கிய வெங்காயம் ,மிளகாய் ,கறிவேப்பிலை  இட்லி மாவு சேர்த்து நன்றாக கலக்கவேண்டும். பிறகு  உப்பு சேர்த்து ,கடாயில்  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு , நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கி நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின் குழிப்பணியாரக்கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவுக் கலவையை ஒவ்வொரு குழியிலும்  ஊற்றி வெந்ததும் பிரட்டி எடுத்தால் சுவையான  முட்டைப் பணியாரம் தயார்!!