கோவையில் யானை தாக்கியதில் லாரி ஓட்டுநர் பலி..!!

கோவை மாவட்டத்தில் துடியலூர் அருகே காட்டு யானை ஓன்று தாக்கியதில் லாரி  ஓட்டுநர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியிருக்கும் ஆனைகட்டி, மாங்கரை, தடாகம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் அடிக்கடி உணவு மற்றும் குடிநீருக்காக குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன.

Image result for kovai Western Ghats Wild elephant

இந்நிலையில் பன்னிமடை சஞ்சீவி நகர் பகுதியை சேர்ந்த  லாரி ஓட்டுநரான கணேசன் (வயது 27) நள்ளிரவில் பணியை முடித்துக்கொண்டு  தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.  அப்போது திடீரென அவர்  எதிரே வந்த ஒற்றை காட்டு யானை பலமாக  தாக்கி தூக்கி வீசியுள்ளது. இதில் கணேசனுக்கு கால் முறிந்ததுடன் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டு கீழே விழுந்தார்.

Image result for kovai Western Ghats Wild elephant

இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் உடனடியாக பட்டாசு வெடித்தும் வாகனத்தில் ஒலி எழுப்பியும் யானையை அங்கிருந்து மலைப்பகுதிக்கு விரட்டினர்.பின்னர் படுகாயமடைந்த கணேசனை  மீட்டு உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.

Image result for dead body

இதனையடுத்து யானை ஊருக்குள் நுழையும் தகவல் யாருக்கேனும் தெரிந்தால் உடனடியாக 1800 424254 56 என்ற டோல் ஃப்ரீ எண்ணைத் தொடர்பு கொண்டு  தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்களை வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.