விவகாரத்தால் வந்த விபரீதம்…!!

போடியில் கணவர் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால், குழந்தையும் தாயும் விஷம் குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தேனி மாவட்டம் போடிநாயகனுறைச் சேர்ந்த பிரியங்கா, தனது கணவர் பல்லவராஜன் மீது  கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். இந்நிலையில் 15 மாத பெண் குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். மேலும் பிரியங்காவுக்கு பல்லவராஜன் அண்மையில் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக பல்லவராஜன் குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் மனமுடைந்த பிரியங்கா போடியில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று  தனது மகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம் குடித்தார்.

இதில் குழந்தை சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தையின் தாயை  அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பிரியங்காவிற்கு  தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். குழந்தையும் தாயும் விஷம் குடித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.