இந்திய சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் துல்கர் சர்மா. இவர் சமீபத்தில் ‘லக்கி பாஸ்கர்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வெளியாகி மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் உலகம் முழுவதும் 111 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இது தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் 9ம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் இந்த படத்தை பார்த்துள்ளனர்.

அதன் பின்பு அதே போன்று வீடு, கார் வாங்கி விட்டு வருவதாக தனது நண்பர்களிடம் கூறிவிட்டு விடுதியில் இருந்து தப்பி சென்றுள்ளனர். இந்த மாணவர்கள் தப்பிச்செல்லும் வீடியோ அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி விரைந்து வந்த காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களை தேடி வருகின்றனர்.