மீண்டும் பெங்களூரு அணி தோல்வி….. டெல்லி அணி சூப்பர் வெற்றி..!!

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 18.5 ஓவரில் 6 விக்கெட் இழந்து 152 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 20 -வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது. இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில்  டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் குவித்தது . அதிகபட்சமாக வீரர் கேப்டன் விராட் கோலி 41 (33) ரன்களும், மொயின் அலி 32 (18) ரன்களும் அக்ஸ்தீப் நாத் 19 (12) எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். டெல்லி அணியில் அதிகபட்சமாக  ககிசோ ரபாடா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மேலும் மோரிஸ் 2 விக்கெட்டுகளும் , லமிச்சானே, அக்‌ஷர் பட்டேல் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 18.5 ஓவரில்  6 விக்கெட்டுகளை  இழந்து 152 ரன்கள் எடுத்து  இலக்கை எட்டியது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 67 (50) ரன்கள், பிரித்வி ஷா 28 (22) ரன்கள் எடுத்தனர். இதனால்  டெல்லி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது .ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  அணியில் அதிகபட்சமாக நவ்தீப் சைனி 2 விக்கெட்டுகளும், மொயின் அலி, டிம் சவுதி, முகமது சிராஜ், பவன் நெகி, ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளும்  வீழ்த்தினர். டெல்லி அணியின் வெற்றிக்கு காரணமான  ககிசோ ரபாடாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.  ரபாடா 4 ஓவர் வீசி 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.