ஆண்ட்ரே ரஸெலை தூக்கிய “ரபாடா”……. டெல்லி அணி சூப்பர் ஓவரில் வெற்றி….!!

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றது. 

12 ஐ.பி.எல் திருவிழாவின் 10-ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது . இவ்விரு அணிகளுக்கிடேயேயான  போட்டிடெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக  ஆண்ட்ரே ரஸெல் அதிரடியாக விளையாடி  28 பந்துகளில் 62 ரன்கள்( 6 சிக்ஸர், 4 பவுண்டரி) விளாசினார்.  தினேஷ் கார்த்திக்கும் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து  இலக்கை நோக்கி தொடக்க வீரர்களான ஷிகர் தவானும், பிருத்வி ஷாவும் களமிறங்கினர். தொடக்கத்தில் அதிரடியாக விளையாடிய தவான் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரும், பிருத்விஷாவுடன் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இதையடுத்து  ஷ்ரேயஸ் ஐயர்  43 (32) ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த ரிசப் பன்ட்டும் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து இங்ரம், பிருத்வி ஷாவுடன்  ஜோடி சேர்ந்தார். இதையடுத்து அதிரடியாக விளையாடிய பிருத்விஷா சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிர்ஷ்டவசமாக   55 பந்துகளில் 99 ரன்கள் (3 சிக்ஸர் 10 பவுண்டரி) குவித்து ஆட்டமிழந்தார்.

 

இதையடுத்து ஹனுமா விஹாரியும், இங்ரமும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் சிங்கிள் சிங்கிளாக ரன்கள் எடுக்க ஆட்டத்தில் பதற்றம் நிலவியது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட குல்தீப் யாதவ் சிறப்பாக பந்து வீசினார்..அவர் பவுண்டரியே கொடுக்காமல் சிறப்பாக வீசினார். அந்த ஓவரில் தூக்கி அடிக்க முயன்று விஹாரி  2ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட பேட்டிங் செய்த இங் ரம் 1 ரன் மட்டுமே எடுத்தார்.  இதனால் போட்டி சூப்பர் ஓவராக அமைந்தது.

இதையடுத்து சூப்பர் ஓவரில் டெல்லி அணியின் தொடக்க வீரர்களான ஷ்ரேயஸ் ஐயரும், ரிசப் பன்ட்டும் களமிறங்கினர்.  பிரசித் கிருஷ்ணா  சூப்பர் ஓவரை வீசினார். முதல் பந்தை எதிர்கொண்ட ரிசப் பன்ட் 1 ரன் எடுக்க, 2வது  பந்தை  ஷ்ரேயஸ் எதிர் கொண்டு   பவுண்டரி விளாசி அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து 4வது பந்தில் ரிசப் பன்ட் 2 ரன்கள் எடுத்தார். அடுத்த 2 பந்துகளில் 3 ரன்கள் எடுக்க கொல்கத்தா அணி 10 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 11 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்களாக தினேஷ் கார்த்திக்கும், ஆண்ட்ரே ரஸெலும் பேட்டிங் செய்ய களமிறங்கினர். சூப்பர் ஓவரை வீசுவதற்கு  ரபாடா தயாராகினார். ரபாடா வீசிய  முதல் பந்தை எதிர் கொண்ட ரஸெல் பவுண்டரி விளாசினார். இதனால் கொல்கத்தா அணி  வெற்றி பெற்று விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 2 வது பந்தை சூப்பராக வீசி ரன் கொடுக்காமல் கட்டுப்படுத்தினார். 3வது பந்தை ரஸெலுக்கு சரியான யார்க்கர் வீசி மிடில் ஸ்டெம்பை தெறிக்கவிட்டார் ரபாடா. அடுத்து ராபின் உத்தப்பா களம் கண்டார். அடுத்த 3 பந்துகளில் ஒவ்வொரு ரன்கள் எடுக்க கொல்கத்தா அணி    7 ரன்கள் மட்டுமே  எடுத்தது . ரபாடா சிறப்பாக சூப்பர் ஓவரை  வீசி ரஸெல் விக்கெட்டை வீழ்த்தி அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.