டெல்லி அணி 147 ரன்கள் குவிப்பு… இலக்கை எட்டுமா சென்னை..?

டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 147 ரன்கள் குவித்துள்ளது  

2019 ஐபிஎல் லீக் போட்டிகள் முடிந்து தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குவாலிபையர் 1ல்  சென்னை அணியை  வீழ்த்தி மும்பை அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. எலிமினேட்டர் சுற்றில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி அணி குவாலிபையர் 2க்கு தகுதி பெற்றது. இந்நிலையில் குவாலிபையர்2ல்  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதும் போட்டி விசாகப்பட்டினத்தில் இரவு 7 : 30 மணிக்கு தொடங்கியது.

Image

இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவானும், பிருத்வி ஷாவும் களமிறங்கினர். தீபக் சாஹர் வீசிய 3வது ஓவரில் பிருத்வி ஷா 5 ரன்னில் ஏமாற்றமளித்தார் . அதை தொடர்ந்து ஷிகர் தவானும் 18 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து ஓரளவு தாக்கு பிடித்த நிலையில் கோலின் மன்ரோவும் 27 ரன்னில் ஆட்டமிழந்தார்.

Image

அதன் பின் வந்த  ஷ்ரேயஸ் ஐயரும் 13, அக்சர் பட்டேல் 3, ரூதர்போர்ட் 10, கீமோ பால் 3 ரன்னிலும் ஆட்டமிழந்ததால் பார்ட்னர்ஷிப் இல்லாமல் டெல்லி அணி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது. இருந்த போதிலும்  ரிஷப் பண்ட் பொறுப்புடன் விளையாடி 38 (25) ரன்கள் சேர்த்த நிலையில் கடைசி கட்டத்தில் தீபக் சாஹர் வீசிய  19வது ஓவரில் ஆட்டமிழந்தார்.இதையடுத்து ட்ரெண்ட் போல்ட் ஜடேஜா வீசிய கடைசி ஓவரில் 1சிக்ஸர் அடித்து ஆட்டமிழக்க, அடுத்து வந்த இஷாந் சர்மா கடைசி 2 பந்தில் அதிரடியாக  4,6 அடித்தார். அமித் மிஸ்ரா 6* (3) ரன்னிலும், இஷாந் சர்மா 10* (3) ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Image

இறுதியில் டெல்லி அணி 9 விக்கெட் இழந்து 147 ரன்கள் குவித்தது. சென்னை அணி தரப்பில் தீபக் சாஹர், ஹர்பஜன் சிங், ஜடேஜா, பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், இம்ரான் தாஹிர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து  148 ரன்கள் இலக்கை நோக்கி சென்னை அணியின் தொடக்க வீரர்களாக பாப் டு பிளெஸிஸும், சேன் வாட்சனும் களமிறங்கினர். தொடக்கத்தில் பொறுமையாக விளையாடிய டு பிளெஸிஸ் அதிரடியாக 37* (25) ரன்களுடனும், வாட்சன் 5* (11) ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். தற்போது  சென்னை 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி  41 ரன்களுடன் விளையாடி வருகிறது

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *