சந்திரயன்-2 திட்டத்தில் பணியாற்றிய நமது விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
இன்று அதிகாலை விக்ரம் லேண்டர் தரையிறங்கும் பணி தொடங்கப்பட்டது. நிலவின் தென் துருவ பகுதியில் எந்த ஒரு நாடும் இதுவரை லேண்டரை தரையிறக்கியதில்லை என்பதால் இந்த அரிய நிகழ்வை காண நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் தொலைக்காட்சியில் பார்க்க காத்திருந்தனர்.

பிரதமர் மோடி பெங்களூரு இஸ்ரோ மையத்திற்கு ஆர்வமுடன் இதனை காண வந்திருந்தார். விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க 2.1 கிமீ தூரத்தில் இருக்கும்போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. லேண்டரில் இருந்து சமிக்ஞைக்காக (signal) இஸ்ரோ விஞ்ஞானிகள் காத்திருந்தனர். ஆனால் சிக்னல் கிடைக்காததால் இஸ்ரோ மையமே அமைதியானது.
இஸ்ரோ தலைவர் சிவன் லேண்டரில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை என்று கரகரத்த குரலில் அறிவித்தார். இதையடுத்து பிரதமர் மோடி கடைசி நிமிட பின்னடைவு நிரந்தரமானதல்ல என்றார். பிரதமர் மோடி எதிர்வரும் விண்வெளி திட்டங்களில் விஞ்ஞானிகள் சாதிப்பார்கள் என்று நம்பிக்கையூட்டினார். மேலும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டரில் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார். அதில், ”சந்திரயன்-2 பணியின் ஒரு பகுதியாக இருந்த நமது விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது. சந்திரயான்-2 திட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சோதனை விரைவில் சரியாகிவிடும். அவர்கள் தங்கள் முயற்சிகளின் வெற்றியை அறுவடை செய்யக்கூடிய நாள் வெகு தொலைவில் இல்லை”’ என்றார்.
The dedication of our scientists who were part of the Chandrayaan mission is commendable. The present difficulties will soon be overcome. The day is not far ahead when they will be able to reap the success of their efforts.
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) September 7, 2019