கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல இசையமைப்பாளர் உயிரிழப்பு…. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல இசையமைப்பாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹிந்தி திரையுலகில் தொன்னூறுகளில் பிரபல இசையமைப்பாளராக வலம் வந்தவர் ஷ்ரவன் ரத்தோடு. இவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டவுடன் மும்பையில் உள்ள மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் நேற்று இரவு 9:30 மணியளவில் ஷ்ரவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது மகன் சஞ்சீவ் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் சிகிச்சைக்கான 10 லட்சம் பணத்தை தர முடியாத சூழலில் தந்தையின் உடலை எடுத்துச்செல்ல மருத்துவமனை அதிகாரிகள் மறுத்து விட்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்களும், திரைபிரபலங்களும் இசையமைப்பாளர் ஷ்ரவன் ரத்தோடு மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *