தொட்டால் பரவும் கொடிய கொரானா … 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை இழந்த இத்தாலி வெளியிட்ட வீடியோ..!!

சீனாவில் தொடங்கி சர்வதேச அளவில் அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த கொடிய வைரஸ் சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் மக்களை கொன்று குவித்து வருகிறது.

இன்னும் ஒரு சில நாட்களில் சீனாவை விட இத்தாலியில் பலி எண்ணிக்கை உயரும் என்றே தெரிகிறது. இத்தாலியில் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொரோனா கொன்றுள்ளது.

கடந்த 3 நாட்களில் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். மேலும் கொரோனா தாக்கியதில் பலியானவர்களுள் பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கொரானா வைரஸ் எவ்வாறு  ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிமையாக  பரவுகிறது , இதன் தற்காப்பு நடவடிக்கை  குறித்து இத்தாலி  விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.