22ஆம் தேதி ஊரடங்கு…. கைத்தட்டி, மணி அடியுங்க…. மோடி வேண்டுகோள் ….!!

கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகின்றார். அதில் ,

மார்ச் 22 ஞாயிறன்று மக்கள் ஊரடங்கு என்பதை தாண்டி மேலும் ஒரு விஷயத்தையும் கேட்கிறேன். தங்களை பற்றி கவலை கொள்ளாமல் மக்களுக்காக உழைக்கும் மருத்துவர்கள் , செவிலியர்கள், பத்திரிகையாளர்கள், உணவு விநியோகம் செய்வோர் அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்போர் வேலை செய்கின்றனர். அவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

ஊரடங்கு அமல்படுத்தப்படும் மார்ச் 22ஆம் தேதி மாலை 5 மணிக்கு மக்கள் தங்களது வீடுகளில் உள்ள பால்கனியில் நின்று கைத்தட்டியும் மணி அடித்தும் கொரானா வைரஸுக்கு எதிராக போராடி வரும் ஹீரோக்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும்.

பதுக்கலில் ஈடுபடுபவர்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். மனிதாபிமானத்துடன் உணர்வுப்பூர்வமாகவும் தனியார் நிறுவனங்கள் நடந்துகொள்ளவேண்டும். அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும்; தேவையற்ற பீதி வேண்டாம் என்று தெரிவித்தார்.