“சிறை செல்லும் வைகோ” குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு ….!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திமுக ஆட்சி காலத்தில் வைகோ இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக ஆயிரம் விளக்கு காவல் துறையினர் 2009_ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கு MP மற்றும் MLA_க்கள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில் அவர் மீது குற்றம் நிரூபணமாக்கப்பட்டு குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பை வெளியிட்ட நீதிபதி சாந்தி , உங்களுக்கான தண்டனையை அறிவிக்கப்பிக்கின்றேன் இன்று அறிவிக்கவா அல்லது திங்கள்கிழமை அறிவிக்கவா என்று தெரிவித்தார். அதற்க்கு வைகோ தண்டனையை இன்றே அறிவியுங்கள் என்று சொல்லப்பட்ட   நிலையில் வைகோ_விற்கு 10,000 ரூபாய் அபராதம் மற்றும் 1 ஆண்டு சிறைத்தண்டனையை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.