நாட்டின் முதல் பி.எஸ் மோட்டார் சைக்கிள் … இந்தியாவில் அறிமுகம் செய்த ஹீரோ ..!!

ஹீரோ நிறுவனம் முதன் முதலாக பி.எஸ். மோட்டார் சைக்கிளை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பி.எஸ்.6 மோட்டார் சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஹீரோ ஸ்பிளென்டர் பி.எஸ். 6 மோட்டார் சைக்கிள் புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஹீரோ ஸ்பிளென்டர் பி.எஸ். 6 மாடலை  அறிமுகம் செய்தது.

Image result for hero splendor bs6

இது ஹீரோ ஸ்பிளென்டர் பி.எஸ். 4 மாடலின் விலையை விட அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அதன்படி புதிய பி.எஸ்.6 மாடலின் விலை 12 முதல் 15 சதவிகிதம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்சமயம் விற்பனையாகி வரும்  ஹீரோ ஸ்பிளென்டர் ஐ-ஸ்மார்ட் விலை ரூ. 57,000 ஆகும்.

Image result for hero splendor bs6

ஆகையால், ஹீரோ ஸ்பிளென்டர் பி.எஸ். 6 விலை ரூ. 66,000 (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஹீரோ ஸ்பிளென்டர் ஐ ஸ்மார்ட் மோட்டார் சைக்கிளில் 109சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 9.3 பி.ஹெச்.பி. பவர், 9 என்.எம். டார்க் செயல்திறனை வழங்குகிறது. மேலும், இதனுடன் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.