“கீழாடையின்றி கல்லூரி மாணவி சடலம்” கோவையில் மீண்டுமொரு கொடூரம்…!!

பூசாரிப்பட்டி என்ற பகுதியில் உள்ள முட்புதறில் கீழாடையின்றி அலங்கோலமான நிலையில்  சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

கடந்த மாதம் பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் தமிழகத்தையே உலுக்கியது.சமூக வலைதளத்தில் பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து , ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரம் மக்களையே கதிகலங்க செய்தது. இது குறித்து போலீஸ் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட  பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.மேலும் இந்த வழக்கை CBCID போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதை தொடர்ந்து கடந்த வாரம் கோவை  பன்னிமடை பகுதியை சேர்ந்த  6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக சந்தோஷ்குமார் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மீண்டும் ஒரு கொடூரம் கோவையில் அரங்கேறியுள்ளது. கோவை அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் பிரகதி என்ற மாணவி, காணவில்லை என்று புகார் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பூசாரிப்பட்டி என்ற பகுதியில் உள்ள முட்புதறில் கீழாடையின்றி அலங்கோலமான நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.