ஆட்சி செய்ய தெரில…”எதிரியாக பார்த்தார்”…. குமாரசாமியை சாடிய காங்கிரஸ்…!!

குமாரசாமி ஆட்சி செய்ய தெரியாதவர் என்று சித்தராமையா கடுமையாக விமர்சித்துள்ளார்.

கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபித்ததில் தோல்வியை தழுவியதை அடுத்து முதல்வராக எடியூரப்பா கடந்த மாதம் 26ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். கர்நாடகாவின் முந்தைய அரசு கவிழ்த்து குறித்து காங்கிரஸ் கட்சியினர் மீது குமாரசாமி கடும் விமர்சனத்தை தொடர்ந்து முன்வைத்து வருகின்றார். இந்நிலையில் கர்நாடக மாநில முன்னாள் முதலவர் குமாரசாமி_யின் தந்தையும் ,

Image result for kumarasamy

 

முன்னாள் பிரதமருமான தேவேகவுடா_வும் சித்தராமையா_வை கடுமையாக விமர்சித்து வருகின்றார்.அதில், குமாரசாமி முதல்வராக  இருந்ததை பிடிக்காத சித்தராமையா ஆட்சியை கவிழ்ப்பதற்கு காரணமாக இருந்ததாக விமர்சித்தார். தேவேகவுடா_வின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சித்தராமையா தெரிவித்துள்ளார். அதில் , குமாரசாமி ஆட்சி செய்ய தெரியாதவர். கூட்டணி ஆட்சியின் போது என்னை நண்பனாக பார்க்காமல் எதிரியாகவே பார்த்து வந்தார் என்று சித்தராமையா விமர்சித்துள்ளார்.