இட ஒதுக்கீட்டால் சமூகம் முன்னேற்றம் அடையாது- நிதின் கட்காரி கருத்து…!!

இட ஒதுக்கீடு அளிப்பதால் தாழ்த்தப்பட்ட சமூகங்கள் முன்னேற்றம் அடையும் என்பது தவறான கருத்து என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இட ஒதுக்கீடு என்பது தாழ்த்தப்பட்டவர்களுக்கும் , சமூக பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கும் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார். அதேநேரம் இட ஒதுக்கீடு அளித்தால் மட்டுமே தாழ்த்தப்பட்ட சமூகங்கள் முன்னேற்றம் அடையும் என்பது தவறான கருத்து என மத்திய அமைச்சர் கூறினார்.

தொடர்ந்து பேசும் போது , எப்போதெல்லாம் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் கட்சி தொண்டர்கள் சாதிய ரீதியில் இட ஒதுக்கீட்டை வைத்து வாய்ப்பு கோருவது தவறு என கட்கரி தெரிவித்தார். அரசியலில் சாதித்தவர்கள் யாரும் சாதியை முன்னிறுத்தி சாதிக்க வில்லை என கூறிய கட்கரி தேர்தல் வாய்ப்பை கட்சிப் பணியின் அடிப்படையிலே பெற வேண்டுமே தவிர சாதியை வைத்து பெறக்கூடாது என குறிப்பிட்டார்.