“முதல் ஆளாக தல” மக்களோடு நின்ற தளபதி…. ஜனநாயக கடைமையை நிறைவேற்றினர்…!!

திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் முதல் ஆளாக வந்து வாக்களித்து சென்ற நிலையில் நடிகர் விஜய் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார்.

தமிழகத்திலுள்ள 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று  காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையின் திருவான்மியூர் வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் முதல் ஆளாக வந்து தனது வாக்கினை செலுத்தினார். காலை 7.15 மணிக்கு அஜித் , அவரின்  மனைவி ஷாலினி தங்களது  வாக்கை பதிவிட்டனர்.

இதேபோல் நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்க மக்களோடு மக்களாக வரிசையில் நின்றார். அங்கு கூட்டம்  அதிகமாக இருந்தும் நடிகர் விஜய்  10 நிமிடத்திற்கும் மேலாக வரிசையில் பொறுமையாக நின்று தனது வாக்கை பதிவு செய்தார். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் 7.45 மணிக்கு தனது வாக்கை விஜய் பதிவு செய்தார் .