“முதல்வர் தண்ணீர் கூட தரவில்லை” நகைச்சுவையாக பதிலளித்த எடப்பாடி….!!

தலைமை செயலகத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் ஒன்றுமே தரவில்லை என்று நீங்கள் சொல்வீர்கள் தானே என்று நகைச்சுவையுடன் பதிலளித்தார் 

சென்னை தலைமை செயலகத்தில் குடிநீர் பிரச்னை குறித்த ஆலோசனைக்குப்பின் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அமைச்சர்களுக்கு மட்டும் கேட்டவுடன் இரண்டு லாரி தண்ணீர் கிடைக்கிறதே ? என்று செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்து பேசிய தமிழக முதல்வர் கூறுகையில் , உங்களுக்கு எப்படி கிடைக்கிறதோ, அதே போல் எனக்கும், அமைச்சர்களுக்கும் தண்ணீர் கிடைக்கிறது. அமைச்சர்கள் வீடுகளுக்கு இரண்டு லாரிகளில் தண்ணீர் வழங்குவது என்பதும் தவறான செய்தி. நான் எனது வீட்டில் தனியாகத்தான் இருக்கின்றேன் . எனக்கு எதற்கு இரண்டு லாரி தண்ணீர் என்று பதிலளித்தார்.

Image result for எடப்பாடி

தொடர்ந்து பேசிய தமிழக முதலவர் , அமைச்சர்கள் வீடுகளுக்கு லாரியில் தண்ணீர் வழங்குவது வழக்கமான ஓன்று. அதிகாரிகள் வருவார்கள் . அவர்களுக்கு உணவு வழங்க வேண்டும். பார்ப்பதற்கு , கூட்டம் நடத்துவதற்கு அதிகமானோர் வருவார்கள். நீங்கள் கூட எங்க வீட்டுக்கு பேட்டி எடுக்க வந்தீங்கனா நான் எதுமே கொடுக்கவில்லை என்றால் என்ன சொல்லுவீங்க முதல்வர்  தண்ணீர் கூட கொடுக்கவில்லை என்று சொல்லுவீங்க தானே என்று முதல்வர் பதிலளித்ததும் செய்தியாளர் நிகழ்வு சிறிது நேரம் சிரிப்பலையில் இருந்தது.