பயத்தினால் பொறுப்பை மற்றவரிடம் முதல்வர் ஒப்படைக்கவில்லை – TTV.தினகரன்

பயத்தின் காரணமாக வெளிநாடு செல்லும் முதல்வர் தனது பொறுப்பை மற்றவரிடம் ஒப்படைக்கவில்லை என்று TTV.தினகரன் விமர்சித்துள்ளார் .

திண்டுக்கலில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில் , உண்மையில் தொழில் முதலீட்டை இழுத்தால் மகிழ்ச்சி தமிழகத்திலுள்ள நிர்வாக முறைகளை முதலமைச்சர் வெளிநாடு சென்று  உண்மையில் முதலீட்டை கொண்டு வந்தால் மகிழ்ச்சி தான்.ஆனால் அரசியலுக்காக மட்டும் இருக்கக்கூடாது.ஆளுங்கட்சி மக்கள் நம்பிக்கை இழந்துவிட்ட கட்சியாக இருக்கிறது.

அம்மாவின் கட்சியை மீட்டெடுக்கும் ஜனநாயக ஆயுதம்தான் அமுமுக அதை நிச்சயம் நாங்கள் செயல்படுத்துவோம் எங்களுடைய கட்சியின் பதிவு நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளோம். வெளிநாடு சென்ற முதல்வர் பயத்தின் காரணமாக தனது பொறுப்பை யாரிடம் ஒப்படைக்க வில்லை. ஒரே சின்னம் பெற வேண்டும் கட்சியைப் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக வேலூரில் போட்டியிடவில்லை கட்சி பதிவுக்காக வேறொரு தேர்தலில் போட்டியிடவில்லை கட்சி பதிவுக்கு பின்வருமாறு போட்டியிடுவோம் என்று அவர் தெரிவித்தார்.