தோனியின் அதிரடியில் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 175 ரன்கள் குவித்துள்ளது.
12 ஐ.பி.எல் தொடரின் 12-ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில் 8 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வெற்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களான சேன் வாட்சனும், அம்பத்தி ராயுடுவும் களமிறங்கினர். அம்பத்தி ராயுடு 1 ரன் எடுத்து ஏமாற்றமளித்தார்.

இதையடுத்து வாட்சன் 13 ரன்னிலும், கேதார் ஜாதவ் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து ரெய்னாவும், தோனியும் பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதையடுத்து ரெய்னா 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த பிராவோ அவர் பங்குக்கு 27 (16) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அதன் பின் ஜடேஜா8* (3) ரன்களும், கடைசியில் கேப்டன் டோனி ருத்ர தாண்டவம் ஆடினார். கடைசி ஓவரில் டோனி 3 சிக்ஸரை ராக்கெட் வேகத்தில் பறக்க விட்டார். டோனி 46 பந்துகளில் 75 ரன்கள் (4 சிக்ஸர், 4 பவுண்டரி) விளாசினார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 175 ரன்கள் குவித்தது.