”புகழேந்தி எல்லாம் ஒரு ஆளே கிடையாது” பளீச் என்று பதில் அளித்த TTV…!!

அதிமுக – அமமுக இணைப்பு குறித்து வீண் வதந்திக்கு பதில் கூற முடியாது என்று அமமுக பொதுச்செயலாளர் TTV தினகரன் தெரிவித்துள்ளார்.

கும்பகோணம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவிதினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் அமமுக தலைமை கழக நிர்வாகிகள் , மாவட்ட செயலாளர்கள்  பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் , ஒருவர் சென்றால் ஏராளமானோர் அமமுக வில் இணைந்து பலம் சேர்த்து வருகிறார்கள்.

தமிழகத்தில் இந்திக்கு எதிப்பு இல்லை, இந்தித் திணிப்பை தான் எதிர்த்து வருகிறார்கள். புகழேந்திக்கு பற்றி கேள்வி கேட்டு என்னோட நேரத்தை வீணாக்காதீர்கள். அமுமுக , அதிமுக இணைப்பு குறித்து வதந்திகளுக்கு பதில் கூற முடியாது.  சசிகலாவை சிறையில் இருந்து  வெளியே கொண்டுவர முயற்சி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.