பூனை மேல் அவ்வளவு பாசமா..??காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த குஜராத் தம்பதி..!!

திருப்பதியில் தரிசனம் செய்ய வந்த குஜராத் தம்பதியினர் வளர்ப்பு பூனையை  கண்டுபிடிக்கக் கோரி ரேணிகுண்டா ரயில்வே காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்தவர் ஜேஸ்பாய் இவரது மனைவி மினாபீ இவர்களுக்கு  திருமணமாகி 17 ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லாத காரணத்தால் பூனை ஒன்றை செல்லமாக வளர்த்து வந்த நிலையில்  திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக  பூனையுடன் வந்துள்ளனர்.

Image result for cat

இதையடுத்து தரிசனத்திற்கு பின் சொந்த ஊர் செல்வதற்காக  ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் ரயிலுக்காக  காத்திருந்தவர்களின் பூனை தொலைந்தது. இதனால் பதற்றமடைந்தவர்கள் ரயில்வே காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில்  எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பூனை கிடைக்கமால் திரும்பி செல்ல மாட்டோம் என்று  கண்ணீருடன் தெரிவித்தனர்.