“இந்துக்களுக்கு எதிரான பேச்சு” யெச்சூரி மீது வழக்கு பதிவு….!!

வன்முறையுடன் இந்துக்களை தொடர்புபடுத்தி பேசியதாக CPIM பொது செயலாளர்  சீதாராம் யெச்சூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து தேசிய அரசியல் கட்சிகளும் இந்தியா முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். இதில் பிரதமர் மோடி கலந்து கொண்ட தேர்தல் பிரசாரத்தில் , இந்துக்கள் யாரும் வன்முறையில்  ஈடுபடமாட்டார்கள் பேசினார். பிரதமரின் இந்த பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகையில் ,

 

‘‘இந்து புராண நூல்களான ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றில் வன்முறை சம்பவங்கள் நிறைந்துள்ளன. எனவே இந்துக்கள் யாரும் வன்முறையில் ஈடுபடமாட்டார்கள் என்பது தவறான வாதம்’’ என்றார். சீதாராம் யெச்சூரியின் இந்த கருத்தானது  இந்துக்களின் மனதை புண்படுத்தி விட்டது என்றும் , இந்து மதத்தின் புகழை சீதாராம் கெடுக்க நினைக்கிறார் என்றும்  யோகா குரு பாபா ராம்தேவ் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரிதுவார் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார்  யெச்சூரி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.