“திடீரென பற்றி எறிந்த கார் “கடலூரில் நடந்த பரபரப்பு சம்பவம் ,போலீசார் தீவீர விசாரணை !!..

கடலூர் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீரென கார் பற்றி எறிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

கடலூர் மாவட்டம் முது நகரைச் சேர்ந்தவர் பன்னீர் என்பவர் இவர் நேற்றைய தினம் காலையில் தனது காரில் கடலூர் மேப்பர்மலை  வட்டார அலுவலகத்திற்கு சென்று உள்ளார் அதன்பின் காரை நிறுத்திவிட்டு அலுவலகத்திற்கு அவர் சென்ற சிறிது நேரத்தில் காரின் என்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை வெளியானது அதன்பின் சிறிது நேரத்திலேயே காரின் முன்புறம் தீப்பற்றி எரிய தொடங்கியது.

இதனை கண்ட பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி மண்ணை வாரிப் போட்டு தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர் .ஆனால் வெயிலின் தாக்கத்தால் தீ அணையாமல் மென்மேலும் பற்றி எரியத் தொடங்கியது அதன்பின் வட்டார அலுவலக ஊழியர்கள் அங்கே உள்ள தீயணைப்பு கருவி களை எடுத்து வந்து தீயை அணைத்தனர் முது நகர் காவல் துறையினர் கார் எரிந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் இச்சம்பவம் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .