“தலைநகரில் போட்டி” பிஜேபி வேட்பாளராக களமிறங்கும் கிரிக்கெட் வீரர்….!!

இந்திய அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக டெல்லி கிழக்கு தொகுதி பாராளுமன்ற வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுகிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க  வீரரான கவுதம் கம்பீர், கடந்த 2011_ஆம் ஆண்டு தோனி தலைமயிலான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் அணியில் களமிறங்கி சிறப்பாக  விளையாடினார். 2011_ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு இவரும் முக்கிய பங்காற்றினார். இதையடுத்து  IPL தொடரில்  கொல்கத்தா மற்றும் டெல்லி அணிக்காக விளையாடிய கம்பீர் தற்போது கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக விலகி உள்ளார்.

இந்நிலையில் கடந்த சில வாரத்திற்கு முன்பு  இவர் பாஜக கட்சியில் தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் அருண் ஜெட்ட்லி முன்னிலையில் பிஜேபி_யில் இணைந்தார். மேலும் பிரதமர் மோடியின் கொள்கையை பார்த்து தாம் பாஜகவில் இணைந்ததாகவும் , மக்களுக்கு சேவை செய்வதே எனது  குறிக்கோள் என்றும் கம்பீர் தெரிவித்தார். இந்நிலையில் கவுதம் கம்பீர் டெல்லியில் நடைபெறும் மக்களவை தேர்தலில் டெல்லி கிழக்கு பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக பாஜக சார்பில் போட்டியிடுகிறார். மேலும் பாஜகவின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரமும் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.