கட்டிட கான்டிராக்டர் வீட்டில் கொள்ளை…!

கவுண்டம்பாளையம் பகுதியில் கட்டிட கான்டிராக்டர் வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையடித்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அருகே சுப்பிரமணியம்பாளையம் என் .பி .சி நகரில் வசித்து வரும் கட்டிட கான்டிராக்டர் கார்த்திக் என்பவரின் வீட்டின் கதவை உடைத்து பட்டப்பகலில் மர்ம ஆசாமிகள் புகுந்தனர். வேலைக்காரியான மூதாட்டியை தாக்கி விட்டு வீட்டில் இருந்த 33 சவரன் நகைகள் மற்றும் இருபது ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தையும் கொள்ளையடித்து சென்றனர்.இச் சம்பவம் குறித்து கட்டிட காண்டிராக்டர் துடியலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

தொடர்புடைய படம்

இந்த புகாரின் பேரில் உடனே விரைந்து வந்த போலீசார் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளின்  உதவியுடன் கொள்ளையடித்தவர்களை தேடினர்.இதனைத்தொடர்ந்து இடையார்பாளையத்தில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் சந்தேகம் படும் வகையில் நடந்து கொண்டவர்களிடம் விசாரணை நடத்தினர். மேற்கண்ட விசாரணையில் அவர்கள் கொள்ளையடிக்கப்பட்டது உறுதியானது. பல திருட்டு சம்பவங்களில் ஈடுப்பட்டுள்ளது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூபாய் 25 லட்சம் மதிப்புள்ள 91 சவரன் தங்க நகைகளை கைப்பற்றிய  போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.