“நட்பாக பழகி” மகளை சீரழித்த கொடூரன்!

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவருக்கு 2 மகன் 1 மகள் உள்ளனர். இவரது மகள் தனியார் பள்ளியில் 10-ஆம்  வகுப்பு படித்து வருகிறார்.

குமார் 2 வருடங்களுக்கு  முன்பு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த அருண்குமார் (35)  என்பருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நட்பை சாக்காக வைத்து கொண்டு அருண்குமார் அடிக்கடி குமார் வீட்டிற்கு சென்றுவந்துள்ளார். இந்நிலையில் அருணின் பார்வை  குமாரின் மகள் பக்கம் திரும்பியுள்ளது. மார்ச் 4ஆம் தேதி அருண், குமார் வீட்டிற்கு சென்றுள்ளான் யாரும் இல்லாத சமயத்தில் நண்பனின் மகள் என்றும் பாராமல் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.பின்பு, இதனை வெளியே சொல்லக் கூடாதெனவும் மிரட்டியுள்ளார்.

மேலும் , மாணவி பள்ளிக்குச் செல்லும்போது எல்லாம் பின் தொடர்ந்து சென்று தொந்தரவு கொடுத்துள்ளார். ஒருகட்டத்தில் அருண்  டார்ச்சல் தாங்க முடியாமல் இதுகுறித்து அவரது பெற்றோரிடம் மாணவி தெரிவித்ததையடுத்து, அதிர்ச்சியடைந்த குமார் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து புகார்  ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, அருண் மீது பாலியல் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.