மகனை கொன்ற கொடூர தாய் ! மகளின் திருமணத்தால் சிக்கிய சம்பவம்..! விசாணையில் திடுக்கிடும் உண்மை பின்னணி..!

கன்னியாகுமரி மாவட்டம் களியாகாவிளை  பகுதியைச் சேர்ந்த வசந்தா. 49 வயதான இவர்  கணவரை  பிரிந்து  வாழ்ந்து வந்த இவருக்கு லால் கிருஷ்ணன்(13) என்ற மகனும் ஒரு மகளும்  உள்ள நிலையில் அவர்களுடன் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார்.

ஒருநாள் திடீரென  மகன் தூக்க மாத்திரை சாப்பிட்டு விட்டதாக கூறி கூச்சல் போடவே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனை அழைத்து சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி அனுப்பியுள்ளனர்.

இதனையடுத்து மகனின் இறுதி சடங்குகளை  முடித்துள்ளார். ஆனால் தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கிருஷ்ணனின்(19)  தந்தை கூறியதை அடுத்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். ஆனால் எந்த ஒரு ஆதாரமும் கிடைக்காத நிலையில் அந்த வழக்கை அப்படியே விட்டுவிட்டனர்.

இந்நிலையில் மகன் இறந்து 3 ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு வசந்தா தன்னுடைய மகளை சுபனன்(35) என்ற நபருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சுபனன்  மற்றும் வசந்தாவை விசாரணை செய்தனர்.

இந்த விசாரனையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தது. அதாவது வசந்தாவிற்கு சுபனுடன்  தவறான  பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் மகன் கிருஷ்ணாவிற்கு தெரியவர  வெளியில் கூறி விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து,  சுபனன்  உதவியுடன் மகனை கொலை செய்துள்ளார். சிறுவன் கிருஷ்ணனின் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு பின்பு தாய் வசந்தா சுருண்டு விழுந்த மகனின் வாயில் தூக்க மாத்திரைகளை போட்டு நீர் ஊற்றி உள்ளார்.

பெற்ற தாயே மகனை தகாத உறவால் கொன்றது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பேரும்  3 ஆண்டுகளுக்கு பின்பு சிக்கியுள்ளார். தற்போது இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.