
திருமணம் என்பது மறக்க முடியாத நாளாகும். ஆனால் இந்த மணமக்களின் திருமணத்தில் நடந்த சம்பவம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த மணமக்களின் திருமணத்தின்போது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரால் சூழப்பட்ட மேடையில் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது உறவினர்களில் ஒருவர் திடீரென்று பின்னால் இருந்து மணப்பெண்ணை பிடித்துள்ளார்.
இதனால் பொறுமை இழந்த மணமகள் அவரை கன்னத்தில் அறைந்துள்ளார். மீண்டும் மீண்டும் தயக்கமின்றி அறைந்துள்ளார். இதைத்தொடர்ந்து அவனை நோக்கி கத்தியப்படியே இருந்த காட்சி அனைவரையும் திகைக்க வைத்தது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு நெடிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram