எனக்கு ரூ.1 1/2 கோடி நஷ்ட ஈடு வேணும்..! திருமண அரங்கின் மீது வழக்கு தொடர்ந்த மணப்பெண்… வெளியான பரபரப்பு பின்னணி..!!

இங்கிலாந்தில் திருமணத்தின் போது ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மணப்பெண் சுமார் 1 1/2 கோடி நஷ்ட ஈடு கோரி திருமண அரங்கின் மீது வழக்கு தொடர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த காரா டோனவன் என்ற பெண் தனது திருமணத்தின் போது பளபளக்கும் நடன தளத்தில் கால் நழுவி கீழே விழுந்துள்ளார். இதன் காரணமாக அந்த பெண்ணின் முட்டி உடைந்துள்ளது. இதையடுத்து அந்தப் பெண் அரங்க நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் அந்த அரங்கின் நிறுவனம் லேமினேட் செய்யப்பட்ட பிளாஸ்டிக் தளத்தை பரிந்துரை செய்ததாகவும் புகார் அளித்துள்ளார். அதேசமயம் மணமேடையில் நடனமாடவும் குடிப்பதற்கும் அந்த நிறுவனம் மக்களை ஊக்குவித்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நிறுவனத்தின் ஊழியர்கள் மேடையில் ஒருவர் எதிர்பாராமல் சிந்திய மதுபானத்தை துடைக்க தவறிவிட்டனர். இதன் காரணமாக மணப்பெண் டோனவன் மதுபானம் சிந்தியதை கவனிக்காமல் மேடையில் தவறி விழுந்ததால் அவருடைய கை உடைந்துவிட்டது. இதனால் அந்த மணப்பெண் தன்னுடைய ஆசிரியர் பணிக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியுள்ள டோனவன் கன்ட்ரி ஹவுஸ் வெட்டிங்ஸ் லிமிடெட் மீது தனது கை, முட்டி முறிந்ததற்காக வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதையடுத்து டோனவனின் வழக்கறிஞரான பிலிப் கோடார்ட் மது அருந்தும் கோப்பைகளை வைத்துக் கொண்டு நடனமாடும் போது அவை எதிர்பாராமல் சிதறியதாகவும் அதனை நிறுவனத்தின் ஊழியர்கள் துடைக்காத காரணத்தினால் தான் டோனவன் கை முறிந்ததாகவும் வழக்கைப் பற்றி கூறியுள்ளார். மேலும் டோனவனுக்கு இரண்டு கைகளால் எந்திரங்களை பயன்படுத்துதல், எழுதுதல், வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட திறன்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இருப்பினும் நீதிபதியால் டோனவனின் கூற்றுகள் இன்னும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *