திமுகவின் மக்களவை உறுப்பினர் ஆ. ராசா நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது,  சமூக நீதி என்றால் வளர்ந்த நாடுகளில் அதிகமாக பொருளாதார ஏற்ற தாழ்வை, அதிகமாக நிற வெறியை, ஆண் – பெண் பாலின சமத்துவமின்மையை பேசும். அதனால் அவற்றையெல்லாம்விட இந்தியாவில் சோசியல் ஜஸ்டிஸ் என்பதற்கு மிகுந்த, ஆழமான…. ஏன் ?  அருவருப்பு நீக்கப்பட வேண்டிய,  ஆழமான பொருள் கொண்ட ஒரு சொல்லாடலாக இங்கே பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. ஒரு பெயரை சொன்னால்,  பின் சீட்டுல இருக்க பையன் டக்குனு நெட்ல அடிச்சிட்டு,  நமக்கே சொல்லிக்கொடுக்க கூடிய அளவுக்கு அறிவியல் வளர்ந்திருக்கிற காலம்.

எனவே நாங்களே பேசும்போது ஜாக்கிரதையா, இருந்து பேச வேண்டியது இருக்கு. ஏன் இந்தியாவில் சமூக நீதி இவ்வளவு பரவலாக பேசப்பட வேண்டும் ? பாதுகாக்கப்பட வேண்டும். இன்றைக்கு என்ன ஆயிற்று ? இன்றைக்கு இருக்கின்ற தேசத்திற்கு என்ன ஆயிற்று என்றால் ? சமூகநீதியினுடைய மிகப் பெரிய நீண்ட நெடிய வரலாற்றை நமது அரசியல் சட்டத்தில் நம்முடைய முன்னோர்கள், பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே,  நீண்ட விவாதத்துக்கு இடையே,  முடிந்த அளவுக்கு டாக்டர் அம்பேத்கர் அவர்களாலும்,  ஜவஹர்லால் நேரு அவர்களாலும், மற்றவர்களாலும் இந்த சமூக பரப்பில் இருக்கின்ற சமூக இருள்வெளிகளை அகற்ற வேண்டும் என்பதற்காக,  நீண்ட நெடிய காலம் அமர்ந்து,

வருகின்ற சமுதாயத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக…. ஏற்கனவே இருந்த சமூக இழிவுகளை எல்லாம் துடைப்பதற்காக… நல்ல சில சட்டங்களை இயற்றினார்கள். அவை நீண்ட நெடுங்காலமாக நீதிமன்றங்களால் பராமரிக்கப்பட்டு வந்தது. அரசியல் சட்டத்தின் உடைய தொடக்க வரிகள்… இந்த அரசை நாம் எப்படி உருவாக்குகின்றோம் ? இந்த அரசாங்கத்தை இயற்றுவது ஒரு தனி மனிதன் அல்ல. இந்த அரசியல் சட்டத்தை உருவாக்கி கொடுத்தது ஒரு தனி மனிதன் அல்ல. அரசியல் சட்டம் என்ன சொல்கின்றது என்றால் ?

இந்திய மக்களாகிய நாங்கள், இந்தியாவை ஒரு குடியரசு நாடாக,  ஒரு இறையாண்மை உள்ள நாடாக,  ஒரு சமதர்மம் உள்ள நாடாக, ஒரு மத சார்பற்ற நாடாக,  ஒரு ஜனநாயக குடியரசு நாடாக கட்டமைத்துக் கொண்டிருக்கிறோம். அப்போ நம்மளே கட்டமைத்து அந்த அரசியல் சட்டத்தை சொல்லி முடிச்சிட்டா அந்த அரசியல் சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம். இதை நீண்ட நெடிய வரலாறு கொண்ட நம்முடைய நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றமாக இருந்தாலும்… உயர்நீதிமன்றம் இருந்தாலும்…  இங்கே நீதியரசர் சொல்லி இருப்பார்.

அரசியல் சட்டத்தின் பிரிவு 32, 226இன் கீழ் உச்ச நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் அடிப்படை உரிமைகளாக இருந்தாலும் அல்லது அரசியல் சட்டத்தின் முகப்புரையில் சொல்லப்பட்ட அந்த அதிகார பண்புகளாக இருந்தாலும் இவற்றையெல்லாம் காப்பாற்றுகின்ற மரபு நேற்று வரை இருந்தது. இந்த அரசியல் சட்டம் வருகின்ற போது அதுக்காக பட்ட துயரங்கள் என்ன ?  இந்தியாவில் இருக்கின்ற ஜாதி, இந்தியாவில் இருக்கின்ற வேற்றுமைகள், இவையெல்லாம் வெளி உலகத்துக்கு தெரிந்ததா ?  தெரியாது. அதை தெரிய வைக்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு இங்கே அங்கீகாரம் இல்லை. அதை அழிக்க  வேண்டும் என்பதற்காக என்ன பாடுபட்டார்கள் என பேசினார்.