கருகிய நிலையில் மாணவன் சடலம்….. கொலையா…? விபத்தா…? போலீஸ் தீவிர விசாரணை….!!

திருவண்ணாமலையில் மாணவன் ஒருவன் மர்மமாக இறந்தது கிடந்ததையடுத்து  அது கொலையா?விபத்தா ? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை அடுத்த பாரதி நகரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் இவரது மகன் கார்த்திக். இவர் அதே பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய உயர் நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சென்ற 20 ஆம் தேதி அன்று பள்ளிக்கு சென்று மாலை வீடு திரும்பிய கார்த்தி சைக்கிளில் வெளியில் சென்ற கார்த்தி பின் வீடு திரும்பவே இல்லை.

இதனால் அச்சமடைந்த கார்த்தியின் தந்தை ராமகிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர்கள் எங்கு தேடியும் மாணவன் கிடைக்காததால் செய்யாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மாணவரை தேடி வந்த சமயத்தில் மாணவனின் சடலம் அப்பகுதி கால்வாய் ஓரம் கிடப்பதாக தகவல் ஒன்று காவல்துறைக்கு கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் மாணவனின் உடலை மீட்டு பரிசோதித்தபோது அது கார்த்தி தான் என்பது தெரிய வந்தது. மாணவனின் உடலில் ஆங்காங்கே காயங்களும் முகம் கருகிய நிலையிலும்  காணப்பட்டது. அங்கே மது பாட்டில்களும் கிடந்ததால் இது கொலையா அல்லது அப்பகுதி மின்வேலியில் சிக்கி மாணவன் உயிரிழந்தாரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *