கிணற்றில் கிடந்த ஆண் பிணம்… அதிர்ச்சியடைந்த தோட்ட உரிமையாளர்… காவல்துறையினர் தீவிர விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் பந்தல் போடும் தொழிலாளி கிணற்றில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள பட்டணம் முனியப்பன்பாளையம் அருகே மயில்காடு என்ற கிராமம் உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவருடைய சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் அடையாளம் ஆண் நபர் ஒருவரின் பிணம் மிதந்து கொண்டிருந்துள்ளது. இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் உடனடியாக நாமகிரிப்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த ராசிபுரம் துணை சூப்பிரண்டு அதிகாரி பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் பச்சமுத்து மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். இதனையடுத்து தீயணைப்பு துறையினரின் உதவியுடன் கிணற்றில் இருந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் நாமக்கல் மாவட்டம் நடராஜபுரத்தை சேர்ந்த ராஜசேகர் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் பந்தல் போடும் தொழிலாளியான இவர் கடந்த 12ம் தேதியில் இருந்து காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இச்சம்பவம் குறித்த அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அவர்களிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *