“303 இடங்களில் பாஜக முதலிடம்” தேசியளவில் 3_ஆம் இடம் பிடித்த திமுக… தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!

மக்களவை தேர்தலில் 303 இடங்களில் வென்ற பாஜக தேசியளவில் முதல் கட்சியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்திய மக்களவை ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி மே 19_ஆம் தேர்தல் வரை 7 கட்டமாக நடந்து முடிந் நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் தேசியளவில் பாஜக கூட்டணி 350 இடங்களை கைப்பற்றி தனி மெஜாரிட்டியுடன் தனது ஆட்சியை தக்க வைத்தது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு குறித்து நேற்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டது.இந்தியா  முழுவதும்  பா.ஜனதா கட்சி 303 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

மேலும் இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவை தேர்தலில் தேர்தலில் 303 இடங்களில் வெற்றி பெற்று பாஜக முதாளிடத்திலும் , 52 மக்களவை தொகுதிகளை கைப்பற்றிய  காங்கிரஸ் இரண்டாம் இடத்திலும் , 23 இடங்களில் வெற்றிபெற்ற மாநில கட்சியான தி.மு.க தேசிய அளவில் 3-ம் இடத்தை பிடித்துள்ளது என்றும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இறுதி முடிவில் தெரிய வந்துள்ளது.