“மார்பிங் செய்ததற்காக மன்னிப்பு கேட்க முடியாது” ஜாமீனில் வெளிவந்த பாஜக நிர்வாகி பேட்டி…!!

மம்தா பனர்ஜியை மார்பிங் செய்தற்காக மன்னிப்பு தெரிவிக்க முடியாது என்று ஜாமீனில் வெளிவந்த பாஜக நிர்வாகி பிரியங்கா சர்மா தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முகத்தினை  மெட்காலாவில் பிரியங்கா சோப்ரா அணிந்துள்ள உடையுடன் இணைத்து மார்பிங் செய்து அவதூறு பரப்பும் வகையில் வகையில் மீம்ஸ் வெளியிட்ட பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அணியைச் சேர்ந்த பெண் நிர்வாகி பிரியங்கா சர்மா கடந்த 10_ஆம் கொல்கத்தா கொல்கத்தா போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் மேற்கு வங்க மாநில அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியது.

மேலும் கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி பிரியங்கா சர்மா தனது கைது  நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்த பிரியங்கா சர்மாவுக்கு நிபந்தனை நிபந்தனை ஜாமீன் கிடைத்தது. விடுதலையானவுடன் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்த பிரியங்கா  சர்மா பேசுகையில், மார்பிங் செய்யப்பட்ட மம்தா புகைப்படத்தை வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்கப் போவது கிடையாது. நான் மன்னிப்பு கேட்கும் அளவிற்கு ஒன்றும் தவறு செய்யவில்லை. இதற்காக நான் வருத்தம் தெரிவிக்கப் போவது கிடையாது. நான் சிறையில் மிகவும் அநாகரிகமான முறையில் நடத்தப்பட்டேன். என்னை ஒரு கிரிமினலை போன்று நடத்தினார்கள் என்று கூறினார்.   என்று பிரியங்கா சர்மா தெரிவித்தார்.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *