பல வருஷம் காத்திருந்ததற்கு கிடைத்த பலன்…2 வருஷத்துக்கு முன்னால் பதிவிட்ட கமெண்ட்… வைரலாகும் பதிவு…!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்படாததால் எழுந்த கமெண்ட் தற்போது வைரலாக பரவி வருகிறது.

மும்பையை சேர்ந்த 30 வயதான கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் ஆவார். இவர் கடந்த ஐபிஎல் சீசனில் 15 இன்னிங்சில் விளையாடி 480 ரன்களைக் குவித்தார். ஆனால் அப்போது ஆஸ்திரேலியா அணிக்கு நடைபெற்ற தொடரில் இவர் தேர்வாகவில்லை.இது பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியது.

அப்போது சூர்யகுமார் யாதவ் இதுகுறித்து கூறியதாவது, ஆஸ்திரேலிய சுற்று பயணத்திற்காக இந்திய அணியில் நான் தேர்வு செய்யப்படுவர் என நினைத்திருந்தேன். ஆனால் எனக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்துள்ளது. ஐபிஎல் மட்டுமில்லாமல் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் நான் நன்றாக ஸ்கோர் செய்து இருந்தேன். இருப்பினும் எனக்கு அணியில் வாய்ப்பு கிடைக்காது மிகவும் வேதனையாக இருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.

அப்போது சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்த வீடியோவை பதிவிட்ட நபர் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில் அந்த நபர், “இந்தப் பெயரை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நீண்ட நேரம் இந்திய தொகையை அணிய வேண்டியிருக்கும். உங்களைப் புறக்கணித்த தேர்வாளர்கள் அழுத்தத்தில் இருப்பார்கள். கதவு உடையும்” என பதிவிட்டிருந்தார்.

India Selector FB comment goes viral as Suryakumar Yadav gets call-up

இதேபோன்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், இந்திய கிரிக்கெட் அணியின் தேசிய தேர்வாளருமான அபே குருவில்லாவும் கமெண்ட் செய்திருந்தார். அதில் ஸ்கை சூரியகுமார் யாதவின் நேரம் வரும் என்று பதிவிட்டிருந்தார்.கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அவர் சொன்னது போலவே தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட கமண்ட் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான, சச்சின் டெண்டுல்கர், இர்பான் பதான், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட வீரர்கள் சூர்யகுமார் யாதவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *