”முண்டாசு கவிஞன்” தொடக்க காலம்…. எப்போது பாரதியாக மாறினான்…!!

செப் 11 முண்டாசு கவிஞன் என்று புகழப்படும் பாரதியாரின் இறந்த நாள் விடுதலை உணர்வை பாடல் மூலம் பாடிய பாரதியின் தொடக்க காலம் மற்றும் இளமை பருவம்.

விடுதலை வேட்கையை கவிதை மூலம் ஊட்டினான்:

நவீன தமிழ் கவிதைக்கு தகப்பன் தான் நம் மீசைக் கவிஞன் பாரதி. தமிழ் தமிழர் நலன் , பெண் விடுதலை, தீண்டாமை போன்றவற்றிற்காக ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே தன் கவிதையால் உரக்கக் கத்தியவன் தான்.நம் தேசிய கவிஞன்.

 

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்  பாரினில் இங்கே நடத்த வந்தோம் என்று பெண்ணுரிமைக்காக பாடியவரும் இவர் தான். சாதிகள் இல்லையடி பாப்பா, குல தாழ்த்தி,  உயர்த்தி சொல்லல் பாவம் என்று தீண்டாமை ஒழிப்பு குறித்து பாடியதும்  இவன் தான்.

பிறப்பு :

தமிழ் எழுத்துக்கள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டிய நம் முண்டாசுக் கவிஞன் சின்னசாமி ஐயருக்கும் , லட்சுமி அம்மாளுக்கும் டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி 1882 ஆம் ஆண்டில் அப்போது திருநெல்வேலி மாவட்டம் , இப்போதும் தூத்துக்குடி மாவட்டம்  எட்டையபுரத்தில் பிறந்தார்.அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணி.

பாரதியாக மாறிய தருணம் : 

ஐந்து வயதில் தன் தாயை இழந்த நம் பாரதி , ஏழு வயது முதலே தன் கவிதையை தொடங்கினான். இவருக்கு 11 வயதில் இருக்கும் போது இவருடைய கவி பாடும் ஆற்றலையும் , புலமையையும் பார்த்து பாராட்டி அவருக்கு பாரதி என்ற பட்டத்தை வழங்கினார் எட்டயபுர மன்னர். அன்றிலிருந்து அவர் பெயர் சுப்ரமணிய பாரதி என்றானது.

படிக்கும் போது சுதந்திர ஈர்ப்பு : 

திருநெல்வேலியில் உள்ள இந்துக் கல்லூரியில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்த நம் பாரதியார் தமிழ் அறிஞர்களும் , பண்டிதர்களும் சுதந்திர ஈர்ப்பு ஏற்பட்டு அதனால் மேலும் உயர்ந்தது அவர் தமிழ்ப் புலமை.

இதனால் அவரை புகழ்ந்தது அன்றைய திருநெல்வேலி சீமை.1,897 ஆண்டு ஜூன் மாதம் பதினைந்தாம் நாள் பாரதி தம் வாழ்நாளில் மறக்க முடியாத தேதியாக மாறியது.

குழந்தை திருமணம் : 

16 வயது மட்டுமே நிரம்பிய இருந்தவனுக்கு 7 வயது சிறுமியான செல்லம்மாளுடன் நடந்தேறியது பாலியல் திருமணம். இதுபோன்ற தவறுகள் நடக்காமலிருக்க பின்னாளில் தன் கவிதைகள் மூலம் பாலியல் திருமணத்திற்கு சவுக்கை அடி கொடுத்தார் நம் கவிச்சக்கரவர்த்தி.

பல மொழி புலமை : 

16 வயதில் தந்தையையும் இழந்த இவர் வறுமையில் வாடி தவித்தார். பிறகு காசிக்குச் சென்று அலகாபாத் பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருதத்தையும் , இந்தியையும் கற்றறிந்தார். இந்தி , சமஸ்கிருதம் தவிர்த்து ஆங்கிலம் , வங்காளம் போன்ற பிறமொழிகளிலும் தனி புலமை பெற்று விளங்கினார் நம் புதுமைக் கவிஞன். இத்தனை மொழிகளில் புலமை பெற்றதால்தான் யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று துணிந்து சொன்னான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *