லாபத்தை அள்ளப்போகும் “பிகில்” … மகிழ்ச்சியில் வினியோகிஸ்தர்கள் ..!!

விஜய்யின் “பிகில்” திரைப்படம் இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய தொகைக்கு வியாபாரம் ஆகியுள்ளது. 

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பிகில்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில்  விஜய், நயன்தாரா, இந்துஜா, ஜாக்கி ஷெராப், விவேக், டேனியல் பாலாஜி, யோகிபாபு போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என படக்குழுவினர்  கூறியுள்ளனர் .

Image result for pikil movie

சமீபத்தில் இந்தப் படத்தின் ‘சிங்க பெண்ணே’ பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும்,   விஜய் நடித்த  ‘தெறி’ , ‘மெர்சல்’ ஆகிய 2 திரைப்படங்களும் மாபெரும் வெற்றி பெற்றதுடன், வசூல் சாதனையும் செய்தது .அதைத்தொடர்ந்து ,  ‘பிகில்’ படத்திற்கு வினியோகஸ்தர்கள் மத்தியில் மிகுந்த  எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Image result for pikil movie

இப்படம் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பெரிய தொகைக்கு வியாபாரம் ஆகியுள்ளது . குறிப்பாக ,  இதற்கு முன் விஜய் நடித்த படங்களின் வியாபார சாதனையை ‘பிகில்’ முறியடித்துள்ளது . இதனால் தளபதி ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர் .