கொரோனாவின் எதிரொலி : #INDvSA 2வது மற்றும் 3வது ஒருநாள் போட்டி பார்வையாளர்கள் இன்றி நடைபெறும்!

கொரோனாவின் எதிரொலியின் காரணமாக 2வது மற்றும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பார்வையாளர்கள் இன்றி நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்நிலையில் நேற்று இமாச்சலப்பிரதேசம் தர்மசாலாவில் நடைபெறுவதாக இருந்த இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழை பெய்ததன் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து வருகின்ற 15 ஆம் தேதி லக்னோவிலும், 18 ஆம் தேதி கொல்கத்தாவிலும் ஒருநாள் போட்டி நடைபெற இருக்கிறது.

Image result for ekana

இந்த நிலையில் கொரோனாவின் எதிரொலியின் காரணமாக மேற்குவங்க மற்றும் உத்தரபிரதேச அரசுகளின் வேண்டுகோளை ஏற்று, 2வது மற்றும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பார்வையாளர்கள் இன்றி நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.  உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இந்தியாவில் 74 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆகவே கொரோனா தொற்று வேகமாக பரவக்கூடாது என்பதற்காகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிசிசிஐ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *