ஷகிப், ரஹிம் அரைசதம் விளாசல்….தென் ஆப்பிரிக்காவுக்கு 331 ரன்கள் இலக்கு..!!

வங்காள தேசம் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 330 ரன்கள் குவித்துள்ளது  

12-வது ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 5வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா  –  வங்காளதேசம் அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்து வீச முடிவு செய்தது. இதையடுத்து வங்காள தேச அணியின் தொடக்க வீரர்களாக தமிம் இஃக்பாலும், சவுமியா சர்க்காரும் களமிறங்கினர்.

Image

இந்த ஜோடி வங்காள  அணிக்கு நல்ல தொடக்கம் அமைத்து கொடுத்தது அதன் பிறகு தமிம் 19 ரன்னிலும், தமிம் இக்பால் 42 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து ஷகிப் அல் ஹஸன், முஷ்பிகுர் ரஹிம்  களமிறங்கி நிலைத்து நின்று ஆடினர். இருவரும் அரைசதம் கடந்து விளாசினர். இதையடுத்து ஷகிப் அல் ஹஸன் 75 ரன்னில் ஆட்டமிழந்தார் . இந்த ஜோடி 142 ரன்களை குவித்து அசத்தியது.

Image

உலக கோப்பை தொடரில் வங்கதேச அணி சார்பில் அதிக ரன்கள் சேர்த்த பார்ட்னர்ஷிப் என்ற பெருமையை இருவரும் பெற்றனர். அதன் பிறகு முஷ்பிகுர் ரஹிம் 78 ரன்னில்  ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த மொகமது மிதுன்  21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய மகமதுல்லா அவர் பங்குக்கு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மோசடெக் ஹுசைன் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

Image

கடைசி வரை ஆடிய மகமதுல்லா ஆட்டமிழக்காமல் 46 ரன்கள் எடுத்தார். இறுதியில் வங்கதேச அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 330 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்க அணி சார்பில் பெலுக்வாயோ, கிறிஸ் மோரிஸ், இம்ரான் தாஹிர் ஆகியோர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 331 ரன்கள் இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி விளையாடி வருகிறது.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *