5 ஓவர் போட்டியாக மாற்றம்….. பெங்களூரு அணி 62 ரன்கள் குவிப்பு.!!

பெங்களூரு அணி 5 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 62 ரன்கள் குவித்துள்ளது. 

ஐ.பி.எல் 49 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்  பீல்டிங்கை தேர்வு செய்தார். இப்போட்டி பெங்களூரு சின்ன சுவாமி ஸ்டேடியத்தில்  இரவு 8 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழையின் காரணமாக போட்டி பாதிக்கப்பட்டு 11. 26 மணிக்கு போட்டி தொடங்கியது. இதனால் 5 ஓவர் போட்டியாக மாற்றப்பட்டது.

Image

இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலியும், டிவிலியர்ஸும் களமிறங்கினர். வருண் ஆரோன் வீசிய முதல் ஓவரில் விராட் கோலி முதல் இரண்டு பந்தில் 6,6 டிவில்லியர்ஸ் 4, 4 அடிக்க அந்த ஓவரில் பெங்களூரு அணி அதிரடியாக விளையாடி மொத்தம் 23 ரன்கள் குவித்தது. ஷ்ரேயஸ் கோபால் வீசிய 2வது ஓவரில்  கோலி 6, 4, அடித்தார். அதன் பிறகு 4வது பந்தில் கோலி 7 பந்துகள் 25 ரன்கள் (3 சிக்ஸர், 1 பவுண்டரி) ஆட்டமிழந்தார்.

Imageஅதை தொடர்ந்து  5 வது பந்தில் டிவில்லியர்ஸ் 4 பந்துகள் 10 ரன்கள் (2பவுண்டரி), 6வது பந்தில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 0 என தொடர்ந்து அவுட் ஆக ஷ்ரேயஸ் கோபால் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார். இதையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க  இறுதியில் பெங்களூரு அணி 5 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 62 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணியில் ஷ்ரேயஸ் கோபால் 3 விக்கெட்டுகளும், தாமஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதையடுத்து ராஜஸ்தான் அணி 63 ரன்கள் இலக்கை நோக்கி  களமிறங்கி விளையாடி வருகிறது.