கோலியும்,, டிவில்லியர்ஸும் ஆக்ரோஷ தாக்குதல்….. கொல்கத்தா அணிக்கு இமாலய இலக்கு….!!

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 3 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்துள்ளது.

12ஆவது ஐ.பி.எல் திருவிழா மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 17 வது லீக் போட்டியில் இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் விராட் கோலியும், பார்த்திவ் பட்டேலும் களமிறங்கினர். தொடக்கத்தில் இருந்தே இருவரும் சிறப்பாக விளையாடி நல்ல துவக்கம் கொடுத்தனர். அதன் பின் பார்த்திவ் பட்டேல் 25 (24) ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய டிவில்லியர்ஸும், விராட் கோலியும் அதிரடியில் இறங்க அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

விராட் கோலி அரைசதம் கடந்து விளாசினார். அதன் பின் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் விராட் கோலி 84 (49) ரன்களில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின் ஸ்டோய்னிஸ் களமிறங்க, டிவில்லியர்ஸும் அதிரடியாக விளையாடி காடைசி கட்டத்தில்  62 (32) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இறுதியாக ஸ்டோய்னிஸ் அதிரடியாக ரன்கள் விளாச இறுதியில் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. ஸ்டோய்னிஸ் 28* (13) ரன்களிலும், மொயின் அலி 0*  ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். கொல்கத்தா அணியில் சுனில் நரேன், குல்தீப் யாதவ், நித்திஷ் ராணா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து கொல்கத்தா அணி களமிறங்கி விளையாடி வருகிறது.