தமாகா சைக்கிள் சின்னத்தில் போட்டியிட தடை…… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!

தஞ்சையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் போட்டியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது .

நாடாளுமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணி , தேர்தல் வியூகம் என தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர் . தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டு வேட்பாளராக என்.ஆர்.நடராஜன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் தஞ்சையில் போட்டியிடும்  தமாகாவுக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்கி இந்த ஒரு தேர்தலில் மட்டும் இந்த சின்னத்தை பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை தேர்தல் ஆணையம் விதித்தது .
Image result for தமாகா சைக்கிள் சின்னம்

 

இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் நிபந்தனையை எதிர்த்தும் , சைக்கிள் சின்னத்தை நிரந்தரமாக வழங்க வேண்டுமென்றும்  தமாகா கட்சியின் தலைவரான ஜி.கே.வாசன்  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது .

Image result for சென்னை உயர்நீதிமன்றம்

அப்போது நீதிமன்றம் தேர்தல் ஆணையம் விதித்த நிபந்தனைக்கு தடை விதிக்க மறுத்து விட்டது . மேலும் சைக்கிள் சின்னம் வழங்கும் போது  தமாகா குறைந்தபட்சம் 2 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விதித்த  நிபந்தனையை சுட்டிக்காட்டி தமாகா தஞ்சாவூரில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அக்கட்சிக்கு சைக்கிள் சின்னம் கிடைப்பதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.