அதிமுக பிரச்சினை வெடித்து வெளியே வர ஆரம்பித்துள்ளது… கனிமொழி பேட்டி …!!

அதிமுகவில் உள்ள பிரச்சினைகள் வெடித்து வெளியே வர ஆரம்பித்துள்ளது என்று தூத்துக்குடி MP கனிமொழி கூறியுள்ளார்.

அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டுமென்று அதிமுகவின் MLA தங்களது கருத்துக்களை கூறி வருவது அதிமுகவிற்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிமுக தலைமை கட்சி விவகாரங்களை பொதுவெளியில் பேச வேண்டாம் என்று கட்சி நிர்வாகிகளை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறுகையில் , அதிமுகவில் உள்ள பிரச்சினைகள் வெடித்து வெளியே வர ஆரம்பித்துள்ளன என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் , கூடங்குளம் அணுக்கழிவு மையம் போன்ற மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத எந்த திட்டத்தையும் அரசு செயல்படுத்தக் கூடாது. அணுக்கழிவு மையம் அமைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு  மக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்துவது சரியல்ல.மின்வாரியம் மட்டுமில்லாமல் அனைத்து அரசு துறை பணிகளிலும் தமிழர்களுக்கு நியாயமான வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை என்று அவர் கூறினார்.