அதிமுக MLA மரணம்…… மேலும் ஒரு தொகுதி காலியாகிறது….. அதிர்ச்சியில் அதிமுகவினர்…!!

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் மாரடைப்பால் காலமானார் .

MGR காலத்தில் அதிமுகவின் அடிமட்ட தொண்டனாக இருந்து படிப்படியாக வளர்ந்தவர் சூலூர் கனகராஜ் . இவருக்கு வயது 67 ஆகிறது . தற்போது அதிமுக_வின்  சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் இவர் இன்று  காலையில் 7.45 மணிக்கு செய்தித்தாள் படித்துக்கொண்டு இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டது .இதனால் அவரை உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .

Image result for சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ்

அப்போது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதே இவரின் உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது . இது அதிமுக_விற்கு அதிர்ச்சிகரமான செய்தியாக பார்க்கப்படுகின்றது . ஏற்கனவே 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருந்த நிலையில் தற்போது சூலூர் சட்டமன்ற தொகுதியும் கலியாகியுள்ளது. அதிமுக_வின் அமைச்சர் வேலுமணி தற்போது சூலூர் வர இருக்கிறாரார். சேலத்தில் இருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி_யும் நேரடியாக வர வாய்ப்புள்ளது . இன்று மாலை இறுதிச்சடங்கு நடைபெறுமென்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.